திருச்சியில் பெண், குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி ஏற்பு

திருச்சியில் பெண், குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி ஏற்பு
X

திருச்சி ஜமால் முகமது கல்லூரி இளைஞர் செஞ்சுருள் சங்கம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி இளைஞர் செஞ்சுருள் சங்கம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பகுதி-5 ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். ஷேக் இஸ்மாயில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடைபெறுவது குறித்தும் அவற்றில் இருந்து பெண்களும் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் அக்பர் உசேன் மற்றும் பேராசிரியர்கள் முனைவர் முகமது தாஜுதீன், உமர் சாதிக், மணிமுத்து ,விக்னேஷ் குமார் முகமது யாசின், ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக இதில் பங்கேற்றவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முனைவர் அகஸ்டின் செய்திருந்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்