திருச்சியில் அக்டோபர் 7ம் தேதி காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெறும் இடங்கள்
Trichy City Corporation -திருச்சி நகரில் பல இடங்களிலும் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளை தேடி சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருவதால் அதனை தடுத்திட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சைஅளிக்க முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த உத்தரவின் படி திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை அக்டோபர் 7ம்தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி நகரில் 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் அந்தந்த சுகாதார நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் காலை மற்றும் மாலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:-
1. பீமநகர்- காலை -அடைக்கல மாதா கோவில். மாலை- சையத் நகர் ஏ.டபிள்யு சி.
2. பீரங்கி குளம்- காலை -சுண்ணாம்பு கார தெரு, மாலை- ஜலால்குஸ்திரி தெரு.
3.இ.பி. ரோடு காலை- திருப்பூர் குமரன் தெரு. மாலை -சிவகாமி அம்மையார் தெரு.
4.எடமலைப்பட்டி புதூர்- காலை -பாப்பா காலனி, மாலை -நேரு தெரு.
5.காந்தி புரம்- காலை- சிவந்தி பிள்ளையார் கோவில் தெரு, மாலை- குறத்தெரு.
8. காட்டூர்- காலை வடக்கு பிள்ளையார் கோவில் தெரு ஏடபிள்யுசி, மாலை- பர்மா காலனி.
9. எம்.கே. கோட்டை- காலை- பொன்மலைப்பட்டி. மாலை- பஸ் நிலையம்.
10. பெரியமிளகு பாறை -காலை -தேவர் புது காலனி, மாலை வி.ஓ.சி. சாலை.
11.ராமலிங்கநகர்- காலை- கீழ தெரு.
12. ஸ்ரீரங்கம் -காலை -ஆசாரம்மா சாலை, மாலை -கொள்ளிடக்கரை.
13. சுப்பிரமணியபுரம்- காலை- டி.வி.எஸ்.நக.ர் ராஜம் தெரு, மாலை ரேஸ்கோர்ஸ் சாலை.
14. தெப்பக்குளம்- காலை- மலைக்கோட்டை டிஸ்பென்சரி, மாலை மலைக்கோட்டை ஏ.டபிள்.யு.சி.
15. தென்னூர்- காலை- மூலக்கொல்லை தெரு, மாலை- மீன்கார தெரு
16. திருவெறும்பூர்- காலை -அம்மன்நகர், மாலை -சக்தி நகர்.
17. உறையூர்-காலை கல்நாயக்கன் தெரு,மாலை டாக்கர் ரோடு.
18. திருவானைக்காவல் -காலை திம்மராய சமுத்திரம்,மாலை - பேங்க் காலனி.
19.ஆர்.பி.எஸ்.கே. ஆண்கள் டீம்- காலை- சாராய பட்டறை தெரு, குறத்தெரு,காந்திபுரம், வைக்கோல் கார தெரு, காந்திபுரம். மாலை- செட்டி பேட்டை தெரு, காந்திபுரம்.
20. ஆர்.பி.எஸ்.கே. பெண்கள் டீம்-தென்னூர் வாமடம், தென்னூர் ஒத்தமினார். மாலை தென்னூர் இனாம்தார் தோப்பு, தென்னூர் சத்யா நகர்.
பொதுமக்கள் இந்த இடங்களில் நடைபெறும் காய்ச்சல் முகாம்களை பயன்படுத்திக்கொண்டு உரிய சிசிச்சை பெற்று பயன் அடையுமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள:, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu