திருச்சி ரெட்கிராஸ் சார்பில் முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி

திருச்சி ரெட்கிராஸ் சார்பில் முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி
X

திருச்சி ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முப்படை தளபதி பிபின் ராவத் உருவ படம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி ரெட்கிராஸ் சார்பில் ஹெிலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்க, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத்.பிரிகேடியர் எல்.எஸ். லிடர் உள்ளிட்ட குழுவினர் சென்ற ஹெலிகாப்டர் கடந்த 8ம் தேதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாய்த் திருநாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் மறைவிற்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் திருச்சி மாநகர் புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அஸ்தி மண்டபம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி கிளை சேர்மன் ராஜசேகரன் தலைமை வகித்தார். செயலர் ஜவஹர் ஹசன், ஆலோசகர் இளங்கோவன், வழிகாட்டு குழு உறுப்பினர்கள் யோகா ஆசிரியர் விஜயகுமார், வில்பர்ட் எடிசன், குணசேகரன் மற்றும் பால் குணா உட்பட பொதுமக்கள் பலர் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story
ai marketing future