திருச்சி ஆயுத படை மைதானத்தில் பெண் காவலர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு துவக்கம்
திருச்சி மாநகர காவல் ஆயுதப்படை மைதானம் (கோப்பு படம்).
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்(2599),சிறை காவலர்(86) மற்றும் தீயணைப்பு துறை காவலர்(674) ஆண் பெண் என மொத்தம் 3359 பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த 10 -12 -2023ஆம் தேதி தமிழகம் முழுவதும் 35 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
மேற்கண்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அடுத்த கட்ட தேர்வுகளுக்காக தேர்வாணையத்தால் திருச்சி மாநகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 800 பெண் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடல் அளவீட்டு சோதனை, சகிப்புத்தன்மை மற்றும் உடற்தகுதி தேர்வுகள் திருச்சி மாநகரம் கே. கே. நகர் ஆயுதப்படை மைதானத்தில் 6 -2 -2024 ஆம் தேதி முதல் 10-2-2024-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது/
கே.கே. நகர் ஆயுதப்படை மைதானத்தில் 800 பெண் போட்டியாளர்கள் கலந்து கொள்ள தேர்வாணையத்தால் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் இன்று 265 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்ட தேர்வில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உயரம் சரிபார்த்தல் பின்னர் 100/ 200 மீட்டர் ஓட்டம் என மொத்தம் மூன்று பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இது போன்று நாளையும் தேர்வு நடத்தப்பட உள்ளது.
மேற்கண்ட 3 பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகின்ற 8 -2 -2024 மற்றும் 9-2-2024 ஆம் தேதிகளில் நீளம் தாண்டுதல் பந்து எறிதல் 100 மீட்டர் ஓட்டம் என மூன்று பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.இன்று தேர்வில் கலந்து கொண்ட 275 போட்டியாளர்களுக்கு நடைபெற்ற சிவி, பிஎம்டீ, பி இ டி இ.டி தேர்வில் பெண் போட்டியாளர்களின் தேர்வினை முன்னின்று நடத்தும் சூப்பர் செக் ஆபீஸர் ஆக நியமிக்கப்பட்டு உள்ள திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu