திருச்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

திருச்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
X
திருச்சியில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.
திருச்சியில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி இன்று நடந்தது.

இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் திருச்சி மாவட்டத்திற்கு அளிக்கப்பட்ட திட்டங்கள், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டியது தொடர்பான புகைப்படங்கள், நலதிட்ட உதவிகள் தொடர்பான புகைப்படங்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன.

இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்