திருச்சி மாவட்டத்தில் இன்று 454 இடங்களில் 11வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் இன்று 454 இடங்களில் 11வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்
X
திருச்சி மாவட்டத்தில் இன்று 11-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்; 454 இடங்களில் நடக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் இன்று 11-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்; 454 இடங்களில் நடக்கிறது.

தமிழகமெங்கும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திருச்சி மாவட்டத்திலும் செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 21 லட்சத்து 86 ஆயிரத்து 100 ஆகும். அவர்களில் முதல் தவணை தடுப்பூசி மட்டும் 16 லட்சத்து 34 ஆயிரத்து 471 பேருக்கும், 2-ம் தவணை 8 லட்சத்து 21 ஆயிரத்து 191 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 24 லட்சத்து 55 ஆயிரத்து 662 டோஸ் வீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 74.8 சதவீதம் ஆகும்.

அதே வேளையில் 10 கட்டமாக நடந்த மெகா சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்திய 8 லட்சத்து 17 ஆயிரத்து 265 பேரும் அதில் அடங்குவர். அதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 7 மணிவரை 11-வது சுற்றாக மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 150 இடங்களிலும், புறநகர் பகுதியில் 304 இடங்களிலும் என மொத்தம் 454 இடங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை செலுத்தாதவர்கள், 2-வது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் கார்டு, செல்போன் எண்ணுடன் அருகில் உள்ள மெகா தடுப்பூசி முகாம்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கலெக்டர் எஸ்.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!