உறையூரில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி உறையூரில் 3 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் 16வது வார்டு வடக்கு உக்கடைகாயிதே மில்லத் நகருக்கும் கல்லாங்குத்துக்கும் இடையே உய்ய கொண்டான் வாய்க்காலில் இரும்பு பாலம் தூக்கி வைக்க வேண்டும்என்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
மக்கள் அதிகாரத்தின் சார்பில் உறையூரில் மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். மேலும் இந்த டாஸ்மாக் கடைகளால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் குடிமகன்களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் சமீபத்தில் இந்த டாஸ்மாக் கடைகளால் பட்டப் பகலில் கொலையும் நடந்துள்ளது. ஆகவே இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறி மனு கொடுக்கப்பட்டது
இந்த இரு மனுக்களின் நகல்களை திருச்சி மாநகரகாவல் ஆணையரிடமும் கொடுக்கப்பட்டு அதன் நிலைமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.மனுவைப் பெற்றுக் கொண்ட துணை ஆணையர் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிகழ்விற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலத் துணைச் செயலாளர் செழியன் தலைமை ஏற்றார்.மக்கள் கலை இலக்கிய கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா, கலைக்குழு செயலாளர் லதா, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தில்லை முரசு , மக்கள் உரிமை கூட்டணி சார்பில் காசிம் ,மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் காஜா முஹம்மது, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட தலைவர் முத்துக்குமார் ,ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பாலு, செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu