அரியலூர் மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு அமைச்சர் அலுவலகத்தில் மனு

அரியலூர் மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு அமைச்சர் அலுவலகத்தில்  மனு
X

இந்து மக்கள் கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவியாளரிடம் மனு அளித்தனர்.

அரியலூர் மாணவி இறப்பில் நீதி கேட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

திருச்சி மாநகரம், கோட்டை பகுதில் இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத் பிரிவு) சார்பில் இன்று 24.1.2022 -ந்தேதி இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சந்துரு தலைமையில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவத்திற்கு தகுந்த நீதி விசாரணை வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வி.என்.நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் அருகே (பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி) கோஷமிட்டனர்.

பின்னர் அமைச்சர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் செய்ய இருந்தவர்களுடன் போலீஸ் உதவி கமிஷனர் பாரதிதாசன், இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதனம் ஏற்பட்டு மாவட்ட தலைவர் சந்துரு, புறநகர் மாவட்ட தலைவர் ராஜா மற்றும் மாவட்ட செயலாளர் பாண்டி உள்ளிட்ட மூன்று நபர்கள் மட்டும் தி.மு.க.தெற்கு மாவட்ட அவலகத்திற்கு சென்று அங்கு அலுவலகத்தில் இருந்த அமைச்சரின் உதவியாளர் இன்பாவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

பின்னர் மனுவை மட்டும் அளித்து விட்டு வெளியே வந்தவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துவிட்டு கலைந்து சென்றனர். இதற்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags

Next Story