பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐ.ஐி.யிடம் மனு
தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பேசி வரும் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் நாடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா மற்றும் நிர்வாகிகள் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் இன்று புகார் அளித்தனர்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வரும் சமூக இயக்கமாகும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவி லாவண்யா வழக்கில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் தகவல் மற்றும் செய்திகளை தவறாக சித்தரித்து பொய்யான ஒரு செய்தியை பிரிவினைவாத செய்திகளோடு தொடர்புபடுத்தி சிறுபான்மை சமூகத்தினர் மீது வெறுப்புணர்வு ஏற்படும் விதமாக அவதூறு பரப்பி கூட்டு சதி செய்து உள்நோக்கத்தோடு செய்திகளை திரித்து தமிழகம் முழுவதும் மதமோதலை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வருகிறார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு பொது அமைதியை காக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu