பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி டி.ஆர்.ஓ.விடம் மனு

பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி டி.ஆர்.ஓ.விடம் மனு
X

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.

பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி திருச்சி டி.ஆர்.ஓ.விடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமியை சந்தித்து சந்தித்து ஒரு மனு அளித்தார்‌.

அந்த மனுவில் திருச்சி மாநகர பகுதிக்குள் ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. சுமார் 500 மாணவ மாணவிகள் அங்கு கல்வி பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கு என்று தனியாக விடுதி செயல்பட்டு வருகிறது. மாணவிகளுக்கு என்று தனியாக செயல்பட்டு வரும் இந்த விடுதி அருகில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணவர் விடுதியையும் புதிதாக தொடங்கியுள்ளனர். மாணவிகள் விடுதிக்கும் இந்த விடுதிக்கும் இடையில் பெரிய அளவில் தடுப்பு சுவர் எதுவும் கிடையாது. தற்காலிகமாக மறைப்பு மட்டும் செய்து வைத்துள்ளனர். கல்லூரி மாணவிகள் குளிக்க செல்வதை பார்த்து மாணவர்கள் கிண்டல் செய்வதாக என்னிடம் அங்கு பயிலும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆதலால் அங்கு பயிலும் விடுதி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டிருந்தது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது