திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு

திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சமூக நீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. அப்போது சமூகநீதி பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை ரவுண்டானா முதல் துவாக்குடி வரை சாலையின் இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக அன்றாடம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இதில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் உடல் உறுப்புகளை இழந்து தவிக்கிறார்கள். சமீபத்தில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது .
அதேபோன்று அந்த சாலையின் இரு மருங்கிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும் பழைய பால்பண்ணை அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu