திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி மனு

திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி மனு
X

நாம் தமிழர் கட்சியினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் திருச்சி உறையூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இன்னும் முழுமையாக நிறைவவு பெறாததால் மக்கள் அன்றாடம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைகிறார்கள். இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத அளவில் சாலைகள் மிக மோசமாக உள்ளன. எனவே பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story