திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள பனானா லீப் உணவக அரங்கத்தில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் மருத்துவர் இராசலிங்கம் தலைமை தாங்கினார்.
மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி. நீலமேகம், துணைத் தலைவர் மதுரை அசோகன், துணை செயலாளர் கரூர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுச் செயலாளர் முனைவர் லெ.பாஸ்கரன் தொடக்க உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் சிறந்த சேவைக்கான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி விருது திருச்சி கே.சி.நீலமேகம், திருவள்ளுவர் விருது பெற்ற பெரம்பலூர் முனைவர் பெரியசாமி, டாக்டர் ஏ.சண்முகம் விருது தஞ்சை முனைவர் முருகானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நல்லாட்சி வழங்கும் தமிழக அரசு மது விலக்கை அமுல்படுத்தி மக்கள் நலனை நிரந்தரமாக்கும் அரசாக செயல்பட வேண்டும்.மத்தியில் லோக்பால், மாநிலத்தில் லோக் ஆயுக்தா நடைமுறை படுத்த வேண்டும்.
மாணவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நீதி போதனை வகுப்பை அனைத்து பள்ளியிலும் நடைமுறை படுத்த வேண்டும்.தமிழக அரசு அனைத்து அலுவலத்தில் பொதுமக்களால் வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் சீட்டு வழங்க கேட்டுக் கொள்வது, மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வேண்டும்.நதிகளை புனரமைத்து, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தூத்துக்குடி கந்தசாமி, மதுரை சேகர், புதுக்கோட்டை முனைவர் கணேசன், சிவகங்கை முனைவர் புகழேந்தி, தஞ்சை முருகானந்தம், கரூர் விசுவநாதன், பெரம்பலூர் சிவக்குமார், மாநில ஆலோசகர் கவிஞர் கலியுகன் கோபி, முனைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக
தொடக்கத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ வரவேற்றார். முடிவில் திருச்சி மாநகர செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu