திருச்சி ரெங்கா நகரில் பன்றி, நாய் தொல்லையால் மக்கள் கடும் அவதி

திருச்சி ரெங்கா நகரில் பன்றி, நாய் தொல்லையால்  மக்கள் கடும் அவதி
X
திருச்சி ரெங்கா நகரில் பன்றி, நாய் தொல்லையால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

திருச்சி ரெங்கா நகர் மாநகராட்சியின் வார்டு எண் 25ல் உள்ளது. அரசு ஊழியர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் சிறு குறு தொழில் செய்பவர்கள் என நடுதரப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு செயல்படும் ரெங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் நகர மக்கள் நோய் நொடியின்றி பாதுகாப்பாக வாழ பல்வேறு நடவடிக்கை மாநகராட்சியுடன் இணைந்து எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்பு மற்றும் நகர் தூய்மை பணிசெய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இருப்பினும் இப்பகுதியில் மாடுகள் கும்பல் கும்பலாக முச்சந்தியில் படுத்து போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் பெரியவர்கள் நடந்து செல்லும்போது கொம்பை ஆட்டி பயமுறுத்துகிறது. இதனால் மக்கள் பயப்படுகிறார்கள்.


நாய்கள் தொல்லை தாங்க முடிவதில்லை. ஆங்காங்கு 7 , 8 நாய்கள் சேர்ந்து கொண்டு ஒன்றை ஒன்று கடித்துக் கொண்டும், துரத்திக்கொண்டும் ஊழைவிட்டுக் கொண்டும் சில சமயம் சாலையில் நடந்து செல்பவர்களை பார்த்து குறைப்பதுமாக உள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். இரவு நேரத்தில் மக்கள் நிம்மதியாக தூங்க முடிவதில்லை.

இது ஒருபுறம் இருக்க பன்றிகள் சாலைகளில் நடைபோடுகிறன சேற்றிலும், சகதியிலும் உருண்டு பெறண்டு சாலையில் சுதந்திரமாக உலாவுகின்றன. முட்கள் நிறைந்த காலி மனைகளில் தங்களுடைய இனவிருத்தியை அதிகபடுத்துகின்றன. ஒவ்வொரு பன்றியும் 7-10 குட்டிகள் போட்டு இரவு நேரங்களில் சத்தம் போட்டு நகர மக்களை தூங்க விடாது தொல்லை தருகின்றன. இதனால் பன்றிகாய்ச்சல் வந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது.

பன்றிக்கு சொந்தக்காரர் அவ்வப்போது வந்து பத்திரமாக உள்ளதா என்று பார்வையிட்டு செல்கிறார். நகரில் பாதிக்கப்பட்ட ஒருவர் அவரிடம் ஏன் குடியிருப்பு பகுதியில் பன்றி வளர்கிறீர்கள் என்று கேட்டதற்கு " நான் மாநகராட்சியில் அனுமதி வாங்கியுள்ளேன். நீ எங்கு வேண்டுமானாலும் புகார் செய்துக்கொள் என்று கூறியுள்ளார். இங்கு மாநகராட்சி ஒப்புதலுடன் பன்றி வளர்க்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே பயமின்றி நாய்களும், பன்றிகளும் மாடுகளும் நடக்கும் சாலைகளில் நகர் மக்கள் மட்டுமே பயமின்றி நடக்கும் காலம் வர வேண்டும். இதற்கு மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பயமின்றி சாலைகளில் நடக்க வேண்டும் இதற்கு மாநகராட்சி உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!