திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்
நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம் ,திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி கிழக்கு ,திருவெறும்பூர் ,கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 44 ஆயிரத்து 742 வாக்காளர்கள் ஆகும்.
இவர்களில் ஆண்கள் 7,52,483 பேரும் பெண்கள் 7 லட்சத்து 97 ஆயிரத்து 548 பேரும், திருநங்கைகள் 241 பேரும் அடங்குவார்கள். திருச்சி நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் ஈடுபட்டுள்ளார். மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
வாக்குச்சாவடி அமைக்கப்படும் இடங்களை ஏற்கனவே ஆய்வு செய்து விட்டு வந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்தையும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள் அந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குகள் அனைத்தும் தேர்தல் முடிந்த பின்னர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கொண்டு வந்து வைக்கப்படும். அங்கு வைத்து தான் அனைத்து வாக்குகளும் எனப்படும் ஆதலால் இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள வசதிகள் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் என்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சீனிவாசன், தேர்தல் பிரிவு தாசில்தார் முத்துசாமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu