திருச்சியில் 2 ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரம் பறிப்பு: கலெக்டர்

திருச்சியில் 2 ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரம் பறிப்பு: கலெக்டர்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு 

திருச்சியில், 2 ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரங்களை பறித்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், தீராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி, அவரது கணவரின் துணையோடு ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதாகவும், வார்டுகளில் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யப்படவில்லை எனவும், கடந்த மாதம் 5 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இதேபோல், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சோபானா மீதும், பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்த புகார்களின் அடிப்படையில், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. இதில் பிச்சாண்டார்கோவில் மற்றும் தீராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்கள், நிதியை முறைகேடாக பயன்படுத்தி இருந்தது தெரியவந்தது. இதனால், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கமணி, தீராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்ரி ஆகியோர் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!