திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பனை விதை சேகரிப்பு நிகழ்ச்சி

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பனை விதை சேகரிப்பு நிகழ்ச்சி
X
திருச்சியில் பள்ளி, கல்லூரிமாணவர்கள் பங்கேற்ற பனைவிதை சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சியில் தண்ணீர் அமைப்பு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பனை விதை சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகளை தேடி என்கின்ற பனை விதைகள் சேகரிப்புப் பணி இன்று நடைபெற்றது .

பனை விதைகள் சேகரிக்கும் பணியில் தண்ணீர் அமைப்பு உறுப்பினர்கள், இயல் நாட்டார் கலை நடுவம் மாணவர்கள், எம்.ஏ.எம்.பி ஸ்கூல் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இணைந்து இன்றைக்கு 3000 மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும் தமிழ்நாட்டில் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து காவிரியில் மேட்டூர் அணையில் தொடங்கி பூம்புகார் வரை காவிரியின் இரு கரைகளிலும் ஒரு கோடி பனை விதைகளை நடுகின்ற பணியானது விரைவில் தொடங்க இருக்கிறது.


அதனையொட்டி இன்றைய தினம் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பனை விதைகள்சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த அடிப்படையில் இன்று திருச்சியில் தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகளைத் தேடி என்கின்ற பனை விதைகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.

திருச்சியில் கே.கே நகர் பகுதி அருகில் உள்ள ஓலையூர் ஆவூர் பகுதிகளில் காலையில் 8:00 மணிக்கு தொடங்கி 10:30 வரை நடைபெற்றது.

பனை விதைகள் சேகரிக்கும் பணியில் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தொடங்கி எம்.பி.ஏ படிக்கின்ற கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.

குறிப்பாக எம்.ஏ.எம்.பி ஸ்கூல் வேளாண்மை கல்லூரியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்து கொண்டனர்.

இன்றைய தினம் 3000ற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது .பனை விதை மாநில விதை மாநில முழுக்க அதை விதை என்ற உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.

பனை விதைகள் தான் நிலத்தினுடைய ஆதாரம். நில வளத்தினுடைய ஆதாரம். நிலத்தடி நீரின் உடைய ஆதாரம். நீர் நிலைகளின் ஆதாரம். எனவே ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினுடைய அடையாளமாக அறமாக அரணாக இருக்கக்கூடிய பனை விதைகளை சேகரிப்போம். தொடர்ந்து நிலவளம் காப்போம், நீர் வளம் காப்போம் என்கின்ற உறுதி மொழியை அனைத்து மாணவர்களும் ஏற்றுக் கொண்டனர்.


பனை விதையானது உச்சி முதல் வேர் வரை மருத்துவ பொருளாகவும், இயற்கை மூலிகைப் பொருளாகவும் குறிப்பாக பனை பனைவெல்லம், பனை கிழங்கு, பனை ஓலை, பனை மட்டை, பனை நுங்குகள், பனை மரங்கள் என ஒவ்வொரு பகுதியும் உச்சி முதல் வேர் வரை இயற்கைக்கும் மக்களுக்கும் உணவாக மருந்தாக சூழலை பாதுகாக்கிற அரணாக நமக்கு பயன்பாட்டில் இருக்கிறது.

எனவே ஆதிகாலத்து பனை அந்தப் பனையை சேகரிப்பதன் வாயிலாக நிலத்தை நில வளங்களை நாம் மீட்டெடுப்போம் என்கின்ற அடிப்படையில் இன்றைக்கு தண்ணீர் அமைப்பு சார்பாக பனை விதைகள் தேடி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர், பேராசிரியர் சதீஷ்குமார், இணைச் செயலாளர் ஆர் கே ராஜா, உறுப்பினர்கள் குமரன்,சந்துரு, லயன் சரவணன் உள்ளிட்டோர் மற்றும் இயல் நாட்டார் கலைநடுவத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.ஏ. எம்.பி ஸ்கூல் மேலாண்மை பயிலும் கல்லூரிகளின் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் பிரியா ஒருங்கிணைத்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil