திருச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திருச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
X

திருச்சியில் அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்பட்ட ஓவிய  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருச்சி அரசு அருங்காட்சியகம் நடத்திய ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சி அரசு அருங்காட்சியகம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு டவுன்ஹால் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஓவியப்போட்டி நடைபெற்றது. திருச்சி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் தலைமை தாங்கினார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவி நிர்மலா முன்னிலை வகித்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ஓவியப்போட்டியானது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயற்கை காட்சிகள் தலைப்பிலும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேசிய தலைவர்கள் தலைப்பிலும், பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தேசிய நினைவு சின்னங்கள் தலைப்பிலும் நடைபெற்றது.

ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. ஓவிய போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்