வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் 10-ந்தேதி குறை தீர்க்கும் முகாம்

வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் 10-ந்தேதி குறை தீர்க்கும் முகாம்
X

திருச்சியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (பைல் படம்)

திருச்சி வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் வருகிற 10-ந் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் திருச்சி மண்டல அலுவலகத்தில் பி.எப். உங்கள் அருகில் என்ற குறை தீர்க்கும் முகாம் ஆன்லைன் மூலம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

இந்த முகாமில் வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் 10-ந் தேதி பகல் 2.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் யுஏஎன் எண், பி.எப். கணக்கு எண், இ-மெயில் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை வரும் 9-ந் தேதிக்கு முன்னதாக ro.trichy@epfindia. gov.in என்ற இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவலை வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையர் முருகவேல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
நாமக்கல் அருகே முட்டை வாகனம் கவிழ்ந்து விபத்து..!