‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ -நல சங்கத்தினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ -நல சங்கத்தினரின்  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நலசங்கத்தினர்.

‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியை நல சங்கத்தினர் நடத்தினர்.

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு 19-04-2024 (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மற்றும் காவேரி நகர் குடியிருப்போர் நகர் நல சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் விக்டர் பொன்னுதுரை, (முன்னாள் Senior Internal Auditor, Defence Services,) தலைமை தாங்கினார். எம் ரவி, ஓய்வு பெற்ற பொது மேலாளர், (Steel Authority of India Limited (SAIL), Rourkela,) இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.


100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அஞ்சலட்டையில் தங்கள் உறவினர் நண்பர்களுக்கு வாசகங்கள் அடங்கிய கடிதத்தை அஞ்சல் செய்தனர். மேலும் 'வாக்களிப்பது எங்கள் உரிமை', 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல', ' எங்கள் வாக்கு எங்கள் உரிமை', ' அனைவரும் தவறாமல் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிப்போம்' போன்ற வாசகங்களை அடங்கிய வாசகங்களை தபால் அட்டையில் எழுதி தபால் செய்தனர்.

இதில் பேராசிரியர் முகமது காசிம், முன்னாள் ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் சத்தியவாகீஸ்வரன், முன்னாள் துணை ஆட்சியர்;எஸ் வசந்தா, மூத்த ஆர்வலர் ராமு சேகர், தொழிலதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுவாக அரசு சார்பில் தான் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பிரிவு சார்பில் வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உண்டு. ஆனால் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்று உள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil