அநாதை பிணங்களை அடக்கம் செய்துவரும் திருச்சி தம்பதியினருக்கு விருது
திருச்சி மாவட்டம் லால்குடி திருத்தவத்துறை அண்ணல் காந்தி பண்பாட்டு கல்விக் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா வினோபா கல்வி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
அண்ணல் காந்தி பண்பாட்டுக் கல்வி கழக தலைவர் புலவர் உலக புவியரசு தலைமை வகித்தார். அண்ணல் காந்தியடிகள் படத்தினை லால்குடி அரிமா சங்க செயலர் அசோகன் திறந்து வைத்தார். காந்தி படத்திற்கு ஆன்றோர்களும், சான்றோர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதனை தொடர்ந்து நாள்தோறும் நற்செய்தி திட்டத்தினை இளங்கோவனும், நூலகத்தை லால்குடி அரிமா சங்க தலைவர் சார்லஸ் நார்மனும், வாசகர் சாலையை புருஷோத்தமனும், தவத் துறை தமிழாலயம் விழிப்புணர்வு மாத இதழை லால்குடி அரிமா சங்க பொருளாளர் மகேஷ்குமாரும், மூலிகை வளர்ப்பினை சிவத்திரு கிருஷ்ணமூர்த்தியும், மரக்கன்றுகளை நட நாச்சியப்பன் உள்ளிட்டோர் திட்டங்களை துவக்கி வைத்தனர்.
விழாவில் அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்துவரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்- வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியருக்கு மனிதம் பேணும் புனிதர் விருதும், லால்குடி பாஸ்கரனுக்கு வள்ளலார் பெருந்தொண்டர் விருதும் வழங்கப்பட்டது.
விருதாளர்களுக்கு அரிமா ஜெயகிருஷ்ணன், சுகுமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.அகிம்சை, உண்மை, நேர்மை குறித்து பன்முக கலைஞர் லால்குடி முருகானந்தம் சிறப்புரையாற்றினார். சூரியமூர்த்தி, கலை முதுமணி, இளங்கோவன், திருமாவளவன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu