திருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறான மின்கம்பங்களை மாற்ற உத்தரவு

திருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறான மின்கம்பங்களை மாற்ற உத்தரவு
X
திருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறான மின்கம்பங்களை மாற்ற அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.

திருச்சி மாநகராட்சி 54 வது வார்டுக்கு உட்பட்ட கலெக்டர் அலுவலக சாலை ராஜா காலனி 2வது மெயின் ரோட்டில் மின் கம்பங்கள் போக்குவரத்திற்குஇடையூறாக இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மின் கம்பங்களை மாற்றி அமைத்திட அமைச்சர் நேரு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், தி.மு.க. பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாநகராட்சி கவுன்சிலர் புஷ்பராஜ் மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!