திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்க உத்தரவு

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆகஸ்டு மாத்திற்குள் முடிக்க மேயர் அன்பழகன் உத்தரவிட்டார்.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை எனப்படும் புதைவடிகால் திட்டப்பணிகள், அம்ருத் புதைவடிகால் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
பாதாள சாக்கடை மூன்றாம் கட்ட பணிகளை பொறுத்தவரை 25,26, 40-42,.45,46.55 ,58., 60, 61 , 63 ஆகிய வார்டுகளில் பகுதியாகவும், 57, 59, 62, 65 ஆகிய வார்டுகளில் முழுமையாகவும் அம்ருத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.330 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது 74 சதவீதம் நிறைவு பெற்று உள்ளன. மொத்தம் உள்ள 32 ஆயிரம் வீடுகளில் 24 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.
இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாண்புமிகு மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் வைத்திநாதன் ,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்ததாரர்களுடன் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகரப் பொறியாளர் (பொ.) சிவபாதம், மண்டல தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி, விஜயலட்சுமி, கண்ணன், ஆண்டாள் ராம்குமார், ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்,ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் அனைத்தையும் ஆகஸ்டு மாதத்திற்குள் நிறைவு செய்து பணி நிறைவுற்ற இடங்களில் உடனடியாக சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதற்கேற்றவாறு பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என மேயர் அன்பழகன் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu