அங்கன்வாடியில் செல்வமகள் திட்டத்தில் 40 பேருக்கு சேமிப்பு கணக்கு துவக்கம்
திருச்சி பெரிய மிளகுபாறையில் அங்கான்வாடி மையத்தில் செயல்படுத்தப்பட்ட செல்வமகள் திட்டம் .
இந்தியா முழுவதும் ஜனவரி 24-ஆம் தேதியான இன்று தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை பெண் குழந்தைகளுக்கு இந்திய தலைமை தபால் நிலையம் மூலம் மத்திய அரசு அறிவித்திருந்த செல்வமகள் திட்டத்தின் மூலம் 40 பெண் குழந்தைகளுக்கு திருச்சி தலைமை தபால் நிலையம் சார்பில் சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு முதல் வருட தவணையாக ரூ.250-ஐ, தலைமை தபால் நிலையம் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்காக நிகழ்ச்சி இன்று மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், பொன்மலை காவல் ஆய்வாளர் நசீம், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், துணை கண்காணிப்பாளர் குருசங்கர், அப்துல் லதீப் மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகள், துணை அஞ்சலக அதிகாரி செந்தில்குமார், வணிக அதிகாரி ஐசக் சேவியர், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்ற அலுவலர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu