திருச்சியில் 24 மணி நேரம் செயல்படும் கருடா ஸ்கேன் சென்டர் திறப்பு
திருச்சியில் 24 மணி நேரம் செயல்படக்கூடிய கருடா ஸ்கேன் சென்டர் திறந்து வைக்கப்பட்டது.
திருச்சி புத்தூர் சிந்தாமணி கூட்டுறவு அங்காடி எதிரில் உள்ள சந்தானம் டவர்சில் 24 மணி நேரம் செயல்படக்கூடிய கருடா ஸ்கேன்ஸ் சென்டர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கருடா ஸ்கேன் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இந்த புதிய கருடா ஸ்கேன் சென்டரின் செயல்பாடுகள் குறித்து நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் 'அனைத்து விதமான நவீன ஸ்கேன் வசதிகள் இங்கு உள்ளது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன்,சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ கலர் டாப்ளர் என அனைத்தும் ஒரே இடத்தில் நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் 20 நிமிடத்தில் ஸ்கேன் எடுத்து விடலாம். சத்தம் குறைவாக இருக்கும் .24 மணி நேரம் இயங்கும் அவசர உறுதி வசதி உள்ளது. உடனுக்குடன் ரிப்போர்ட் செய்ய மருத்துவ குழு உள்ளது. படங்கள் துல்லியமாகவும் தெள்ளத் தெளிவாகவும் இருக்கும்.
இங்குள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேனிலா நரம்பியல் சம்பந்தமான புதிய தொழில்நுட்பம் உள்ளதால் அனைத்து நோய்களையும் கண்டறிய முடியும். காது, மூக்கு, தொண்டை பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது கட்டிகளை எளிதாக கண்டறிய முடியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரேடியேசன் இல்லாத பாதுகாப்பான இயந்திரம் ஆகும். உடல் உறுப்பு முழு பரிசோதனை அனைத்தும் செய்யப்படும் ஸ்கேனில் 12 வருடங்கள் அனுபவம் பெற்ற மருத்துவ குழுவினர் நோயாளிகளின் தேவைக்கேற்ப அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளோம். சி.டி. ஸ்கேன் மூலம் வயிற்றுப்பகுதி மற்றும் உடல் பகுதியில் கட்டிகள் இருந்தால் திசு பரிசோதனை செய்யலாம்.
ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் கசிவுகள் உடலின் எந்த பகுதியில் ஏற்பட்டாலும் கண்டறிய முடியும். அனைவரும் ஒரே குழுவாக செயல்பட்டு நோயாளிகளை அக்கறையுடன் கவனித்து பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான ரிப்போர்ட்டை உடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மருத்துவமனைகளில் இருப்பவர்களை அழைத்து வர இலவச ஆம்புலன்ஸ் வசதி 24 மணி நேரமும் செயல்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு ஸ்கேன் வசதியாக உள்ளது .இதற்கு கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும்' என்றார்.
என்ஜினீயர் கலியபெருமாள், சேது லட்சுமி கலியபெருமாள், தனவீர சேகரன், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே .ராஜேஷ்குமார் மகப்பேறு மருத்துவர் டாக்டர் கே புவனேஸ்வரி லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu