திருச்சியில் ஹோட்டல் முன் நின்ற காரை திறந்து நகைகள் கொள்ளை

திருச்சியில் ஹோட்டல் முன் நின்ற காரை திறந்து நகைகள் கொள்ளை
X

பைல் படம்.

திருச்சியில் ஹோட்டல் முன்பு நின்ற காரின் டிக்கியை திறந்து நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருச்சி மாநகரம், உறையூர் ராமலிங்கநகர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி இந்திராணி (வயது 77). இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் சென்று விட்டு திருச்சி திரும்பியுள்ளனர்.

அப்போது தில்லை நகர் 7-வது கிராசில் உள்ள ஏழாம் சுவை ஹோட்டல் முன்பு தங்களது காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றுள்ளனர். பின்னர் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது காரின் பின்பக்கத்தில் உள்ள டிக்கி திறந்து கிடந்துள்ளது. இதில் இருந்த உடமைகளில் வைக்கப்பட்டிருந்த 16 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தில்லைநகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் இந்திராணி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து தங்க நகைகளை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!