பராமரிப்பு பணிக்காக திருச்சி பொன்மலைக்கு வந்த ஊட்டி மலை ரயில் பெட்டிகள்
ஊட்டி மலை ரயில் (கோப்பு படம்)
பராமரிப்பு பணிக்காக பொன்மலை ரயில்வே பணிமனைக்கு ஊட்டி மலை ரயில் பெட்டி வந்துள்ளது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை ரயில் எஞ்சின்கள் மற்றும் ரயில் பெட்டிகளை பழுது நீக்கி பராமரிக்கும் தொழிற்சாலையாக செயல்பட்டு வருகிறது .
இங்கிருந்து இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகள் பழுது பார்த்து பராமரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஊட்டிக்கு பொன்மலை பனிமலையிலிருந்து 4 ரயில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. இது போன்று சில மாதத்திற்கு முன்பு மலை ரயில் பெட்டிக்கு அழகிய வர்ணம் தீட்டி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான ஊட்டிக்கு வரும் மக்களை கவர்வதற்காக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையில் எழில் மிகு இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காக மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மலை ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக பொன்மலை ரயில்வே பணிக்கு கொண்டுவரப்படுவது வழக்கம்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டியில் இருந்து பராமரிப்பு பணிக்காக ஒரு ரயில் என்ஜின் வந்தது. அந்த ரயிலின் என்ஜின் ஆனது பழுது நீக்கப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வர்ணம் தீட்டி அதனை லாரிமூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
இதைத் தொடர்ந்து நேற்று மாலை ஊட்டியில் இருந்து கண்டைனர் லாரி மூலம் பராமரிப்பு பணிக்காக ஒரு ரயில் பெட்டி வந்துள்ளது.அந்த ரயில் பெட்டி இன்னும் சில நாட்களில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் ஊட்டிக்கு அனுப்பப்படும் என்று பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu