திருச்சியில் ஆன்லைனில் நூதன முறையில் மோசடி செய்த ரூ.13 ஆயிரம் மீட்பு

திருச்சியில் ஆன்லைனில் நூதன முறையில் மோசடி செய்த ரூ.13 ஆயிரம் மீட்பு
X
ஆன்லைனில் நூதன முறையில் மோசடி. திருச்சி சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து பணத்தை மீட்டனர்.

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 78). இவர் திருச்சி வயலூர் ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி ராமசாமி ஆன்லைன் வர்த்தகம் மூலமாக செல்போன் வாங்க ஆர்டர் செய்தார். அப்போது அவரது செல்போனுக்கு எதிர்முனையில் பேசிய நபர் ரூ.13 ஆயிரத்தை அனுப்பினால் செல் போன் வீடு தேடி வரும் என்று கூறி உள்ளார். இவரும் ஆன்லைன் மூலமாக பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் 3 நாட்கள் ஆகியும் செல்போன் வராததால் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருச்சி மாநகர சைபர்கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ராமசாமியிடம் ஆன்லைன் மூலம் செலுத்திய ரூ.13 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் அந்த பணத்தை நேற்று காலை திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் வைத்து ராமசாமியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
ai marketing future