திருச்சி வெங்காய வியாபாரி கொலை வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் கைது

கைது செய்யப்பட்ட செந்தில்குமார்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் வேலி பத்தாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது44). வெங்காய வியாபாரியான இவர் தனது மனைவியான தனலட்சுமியின் முதல் கணவனுக்கு பிறந்த மகளை திருமணம் செய்து வைக்க சொல்லி துன்புறுத்தியதால் மனைவி தனலட்சுமி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் செந்தில் குமார் ஆகியோரால் கம்பியால் தாக்கியும் கழுத்தை நெரித்தும் கொடூரமான முறையில் கடந்த சனிக்கிழமை காலை வாசன் வேலியில் அவர்கள் குடியிருக்கும் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மணப்பாறை காட்டு பகுதியில் எரிப்பதற்காக தனலட்சுமி அவரது கள்ளக்காதலன் செந்தில்குமார் மற்றும் தனலட்சுமி உறவினர்கள் கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(55) அவரது மனைவி சுமதி(42) ஆகியோர் ஒரு ஆம்னி வேனில் சென்றபோது. ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் என்ற இடத்தில் ராம்ஜி நகர் போலீசாரிடம் தனலட்சுமி சுமதி ஆறுமுகம் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். தனலட்சுமி கள்ளக்காதலன் செந்தில்குமார் (55) என்பவர் மட்டும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சம்பவம் நடந்த பகுதி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாக இருந்தால் மேற்கண்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இக்கு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தனலட்சுமியின் கள்ளக்காதலன் செந்தில்குமாரை பிடிப்பதற்காக சோமரசம்பேட்டை போலீசார் 4 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் செந்தில்குமார் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு விரைந்த சோமரசம்பேட்டை தனிப்படை போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu