முசிறி அருகே லாரி மோதிய விபத்தில் ஒருவர் சாவு: லாரி டிரைவருக்கு வலைவீச்சு

முசிறி அருகே லாரி மோதிய விபத்தில் ஒருவர் சாவு: லாரி டிரைவருக்கு வலைவீச்சு
X

பைல் படம்.

முசிறி அருகே லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி பீமநகர் கண்டி தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சுரேந்தர் (வயது 23). இவரும் கல்லுகுழியை சேர்ந்த சூர்யா என்பவரும் முசிறியில் உள்ள நண்பர் வினோத்தின் தந்தை இறப்பிற்கு வந்துவிட்டு மீண்டும் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.

வெள்ளூர் அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்த சுரேந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் உட்கார்ந்திருந்த சூர்யாவுக்கு படுகாயம் ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றார்.

Tags

Next Story