திருச்சியில் ஒரு கிலோ நகை கொள்ளை: 4 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது

திருச்சியில் ஒரு கிலோ நகை கொள்ளை: 4 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது
X

4 மணி நேரத்தில் ஒரு கிலோ திருட்டு நகையை மீட்ட தனிப்படை போலீசாருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்சத்திய பிரியா வெகுமதி வழங்கினார்.

One kg jewelery heist in Trichy: Robbers nabbed in 4 hours

திருச்சியில் ஒரு கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட நான்கு மணி நேரத்தில் மீட்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி கோட்டை பகுதி சந்துக்கடை சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 43 ).இவர் கடந்த 15 வருடங்களாக தனது வீட்டிலேயே நகை பட்டறை வைத்து ஆர்டரின் பேரில் மூக்குத்தி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் நகை வேலை முடித்துவிட்டு வேதாத்திரி நகரில் உள்ள வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். நேற்றும் அதே போல் அவரது மனைவி ஏஞ்சல் மேரி ஆகியோர் வேலை முடிந்து நகை பட்டறையில் நகைகளை செய்து முடித்த நகைகளை வைத்து விட்டு இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினர்.

இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் ஜீவா என்பவர் அவருக்கு போன் செய்து வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார் உடனடியாக வீட்டிற்கு வந்த ஜோசப் தனது மனைவியுடன் வந்தார். சௌந்தரபாண்டியன் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் ஆர்டரின் பெயரில் மூக்குத்தி செய்வதற்காக தங்கத்தை கம்பியாக உருக்கி வைத்திருந்த தங்கம், கல் வைத்த மூக்குத்திகள், கல் வைக்காத மூக்குத்திகள், மூக்குத்திகளின் திருகாணிகள், நகை செய்யும்போது சேதாரமாகும் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த தோடு ஆகிய நகைகள் சுமார் ஒரு கிலோ திருட்டுப் போய் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் இருக்கும்.

உடனடியாக இது பற்றி ஜோசப் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். இதற்காக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார். இந்த நிலையில் கோட்டை காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி கருவாட்டுபேட்டை பரணி குமார் (22)மற்றும் சரவணன் (வயது 22 )செங்குளம் காலனி முருகன் கோவில் தெரு பாலக்கரை ஆகிய இருவரும் சேர்ந்து நகைகளை திருடியது தெரியவந்தது . அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கருவாட்டு பேட்டையில் உள்ள பரணிகுமார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த திருட்டு நகைகளும் உடனடியாக மீட்கப்பட்டது. குற்ற சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்தில் எதிரிகளை கைது செய்ததோடு திருட்டு நகையை மீட்ட ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி மற்றும் கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுலோச்சனா மற்றும் தனிப்படையின் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வெகுமதி வழங்கினார்.

Tags

Next Story
ai solutions for small business