திருச்சியில் மர்மப்பொருள் விழுந்ததில் ஒருவர் காயம்: போலீசார் விசாரணை

திருச்சியில் மர்மப்பொருள் விழுந்ததில் ஒருவர் காயம்: போலீசார் விசாரணை
X
திருச்சியில் சாலையில் சென்றபோது மர்மப்பொருள் வந்து விழுந்ததால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது

திருச்சி சோமரசம்பேட்டை சாரதா சிட்டியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 26). இவர் ஐஜி மெடிக்கலில் தன்னுடன் பணிபுரியும் காஜா பேட்டையை சேர்ந்த சின்னராஜ் (வயது 23) அவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 20) ஆகியோரை நேற்றிரவு காஜா பேட்டையில் இறக்கி விடுவதற்காக தென்னூர் ஹை ரோடு சுப்பையா நடுநிலைப்பள்ளி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறிய உருண்டையான பொருள் ஒன்று ராஜ்குமார் முகத்தில் தாக்கி மூக்கில் காயம் ஏற்பட்டது. உடனே வாகனத்தை நிறுத்தி விட்டு அருகிலுள்ளமருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் ராஜ்குமார் மேல் வந்து விழுந்த மர்ம பொருளை பொதுமக்கள் எடுத்து பார்த்த போது அது வெடிகுண்டு போல தோற்றமளித்தது. இதனால் அச்சம் அடைந்த பொது மக்கள் தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதே சமயத்தில் வெடி குண்டு வீசப்பட்டதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தில்லைநகர் போலீசார், அந்த மர்ம பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பக்கத்து தெருவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வைக்கப்பட்ட வாண வேடிக்கையில் சென்று வெடிக்கக்கூடிய பட்டாசு உருண்டையானது வெடிக்காமல் கீழே விழுந்து ராஜ்குமாரின் மூக்கை பதம் பார்த்தது தெரியவந்தது.

Tags

Next Story
the future of ai in healthcare