'ஒமிக்ரான் பரிசோதனை கட்டணம் ரூ.700'-அமைச்சர் மா, சுப்பிரமணியன் தகவல்

ஒமிக்ரான் பரிசோதனை கட்டணம் ரூ.700-அமைச்சர் மா, சுப்பிரமணியன் தகவல்
X

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.

ஒமிக்ரான் பரிசோதனை கட்டணம் ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று திருச்சி விமான நிலையத்தில், பன்னாட்டு விமானங்களில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கான ஒமிக்ரான் பரிசோதனை நடவடிக்கைகளைப்பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சுப்பிரமணியன் கூறும்போது

திருச்சியில் வெளிநாடுகளில்இருந்து இன்று வந்த பயணிகள் 663 பேருக்கு ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது. அவர்களுடைய முகவரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 1 வாரம் வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளில் வேலை செய்து வருவபர்கள் சுழற்சி முறை பரிசோதனைசெய்யப்படுகிறது. பரிசோதனை செய்ய வசதி இல்லாதோருக்கு தமிழகத்தில் மட்டும் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

திருச்சியில் பரிசோதனை செய்து பாசிட்டிவ் என வந்தால் சாதாரன கொரோனா வர்டுகளில் தங்க வைக்க கூடாது எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டு அதில் தங்கவைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யும் பொழுதுபயணிகளிடத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒருவர் மூலம் 8 பேருக்கும் பரவும் என கூறப்பட்டது. இது அதைவிட கூடுதலாக பரவுகிறது.

சென்னை, கோவையை விட திருச்சியில் மிக குறுகிய நேரத்தில் தாமதம் இல்லாமல் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆறு முதல் ஏழுமாவட்டங்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி உள்ளது.இன்று மதுரையில் 477 பேர், நேற்று சென்னை 500-க்கும்மேற்பட்டவர்கள் என மொத்தம் 3ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைசெய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை செய்வதற்கு 700 ரூபாய் கட்டணம்நிர்ணயிக்கப்படுகிறது. விமான போக்குவரத்து ரத்து செய்வது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்றார்.

Tags

Next Story
ai in future agriculture