திருச்சி கல்லுக்குழியில் வீட்டை விட்டு சென்ற முதியவர் திடீர் மாயம்
திருச்சியில் காணாமல் போன முதியவர் சுப்பையா.
திருச்சி ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரில், தனது தந்தை சுப்பையா (வயது 61) என்பவர் கடந்த 6-ந்தேதி முதல் வீட்டை, விட்டு வெளியே சென்றவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை என்று கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுப்பையாவை. தீவிரமாக தேடி வருகின்றனர்.
காணாமல் போனவர் பெயர்; சுப்பையா, கல்லுக்குழி. திருச்சி. சொந்த ஊர் திண்டுக்கல். மாநிறம், நரை மற்றும் கருப்பு முடி உள்ளவர். உயரம் சுமார் 175 செ.மீ, ஒல்லியன தேகம் உடையவர்.
வெள்ளை நிற முழுக்கை சட்டையும், நீல நிற கட்டம் போட்ட கைலியும் உடுத்தியிருந்தார். நெஞ்சில் ஆப்ரேசன் செய்த தழும்பு உள்ளதாம். இவரை கண்டால்,தகவல் தெரிவிக்கவேண்டிய முகவரி.
காவல் ஆய்வாளர் 94961- 56222,
காவல் உதவி ஆய்வாளர்கள் 94981 56415, 94981 57901
காவல் நிலையம் 0431-2460692 என்ற
போனில் தொடர்புகொள்லாம் என்று மாநகர போலீசாரால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu