திருச்சி உறையூரில் தேங்கிக்கிடந்த மழை நீரில் மூழ்கி முதியவர் பலி

திருச்சி உறையூரில்   தேங்கிக்கிடந்த மழை நீரில் மூழ்கி முதியவர் பலி
X
திருச்சி உறையூரில் தேங்கி கிடந்த மழை தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.

திருச்சி உறையூர் பாத்திமாநகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அந்த பகுதியில் தேங்கி நின்ற முழங்கால் அளவு மழைநீரில் மூழ்கி திருச்சி உறையூர் பாத்திமாநகர் விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 65) இறந்து கிடந்தார்.

அவரது உடலை உறையூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!