திருச்சி பழைய பால் பண்ணை அருகே கழிவறை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு

திருச்சி பழைய பால் பண்ணை அருகே கழிவறை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு
X
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள்.
திருச்சி பழைய பால் பண்ணை அருகே கழிவறை அமைக்க கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் பழைய பால் பண்ணை இருக்கக்கூடிய இடத்தில் திருச்சியில் இருந்து சென்னை வழியாக செல்லும் புறவழிச்சாலை, தஞ்சைமார்க்கமாக செல்லும் புறவழிச்சாலை, சேலம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் புறவழிச்சாலை அமைந்துள்ளது.24 மணி நேரமும் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வெளியூர்களுக்கும் மாநகர பேருந்தும் வரக்கூடிய இடமாக உள்ளது. இந்த இடத்தில் பொது கழிவறை என்பது கிடையாது. இது சம்பந்தமாக பலமுறை மனு கொடுத்து இருக்கின்றோம். இம்முறையும் மனு கொடுத்துள்ளோம்.

இதில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் உளைச்சலை சந்திக்கின்றனர். எனவே இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக கழிவறை கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story
ai in future agriculture