திருச்சி புத்தக திருவிழாவில் ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கேற்பு

திருச்சி புத்தக திருவிழாவில் ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கேற்பு
X

திருச்சியில் நடந்த புத்தக திருவிழாவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் பேசினார்.

Book Festival -திருச்சி புத்தக திருவிழாவில் ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

Book Festival -திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் புத்தகங்களை தேர்வு செய்து வாங்கி வருகிறார்கள். இந்த புத்தக திருவிழா வருகிற 26 ம்தேதி நடைபெற உள்ளது. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றி வருகிறார்கள்.


அந்த வகையில் நேற்று ஒடிசா மாநில முதல் அமைச்சரின் தலைமை ஆலோசகரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் பங்கேற்று மழைக்காடு என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றினார். அவருக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வீ. ந. சோமசுந்தரம் உள்பட தமிழ் ஆர்வலர்கள் நினைவு பரிசு வழங்கினர். இந்த விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட நூலக அதிகாரி சிவகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்