திருச்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி வக்பு வாரிய இடம் மீட்பு

திருச்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி வக்பு வாரிய இடம் மீட்பு
X
ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி வக்பு வாரிய இடம் மீட்பு

திருச்சி ஜலால் குதிரி தெருவில் அமைந்துள்ள ஹஜரத் நபிஸல்லலால்லஹு அலைஹி வஸல்லம் பாத்திஹா என்ற முஸ்லிம் அறக்கட்டளை வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான 11,450 சதுர அடி பரப்பளவு கொண்ட ரூ.12 கோடி மதிப்பிலான இடம் திருச்சி மதுரை ரோட்டில், ராமகிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ளது. தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த இடத்தை தமிழ்நாடு வக்பு வாரிய திருச்சி சரக கண்காணிப்பாளர் மேற்பார்வையில் வக்பு வாரிய ஆய்வாளர் மற்றும் சரக அலுவலர்கள் நேற்று முன்தினம் மீட்டு, தற்போதைய டிரஸ்டிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த தகவலை தமிழ்நாடு வக்பு வாரிய திருச்சி சரக வக்பு கண்காணிப்பாளர் ஷரீப் அஹமது தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!