திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்.

திருச்சி மாநகரில் நாளை (08.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருச்சி நகரியம் கோட்டம், மலைக்கோட்டை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 08.03.2022 (செவ்வாய் கிழமை) அன்று காலை 06.00 மணி முதல் 11.00 வரை பர்மா பஜார், NSB ரோடு, தெப்பகுளம், சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு மற்றும் அல்லிமால் தெரு ஆகிய பகுதியில் அதே போல் தென்னூர் பிரிவிற்குட்பட்ட தென்னூர் ஹைரோடு, ஸ்டேட் பேங்க் முதல் புத்தூர் நால்ரோடு வரை மற்றும் VNP தெரு ஆகிய பகுதியின் உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் (08.03.2022) (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் மாலை 03.30 வரை மின்விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!