தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரி திருச்சியில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரி திருச்சியில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா
X

திருச்சியில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரி திருச்சியில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருச்சி ஜங்ஷன் விக்னேஷ் ஓட்டல் அருகில் இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் சேட்டு முகமது, ஜெயராஜ் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றவேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவு படுத்தி சத்துணவு மையங்கள் மூலமாக நிறைவேற்றவேண்டும் என்பது உள்ளி்டட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில துணை தலைவர் பெரியசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட பொருளாளர் சுந்தர் ராஜன் உள்பட நிர்வாகிகள் பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் கிரேசி லில்லி நன்றி கூறினார்.

Tags

Next Story