வேட்பு மனு தாக்கல் நடந்த இடத்தில் திருச்சி போலீஸ் கமிஷனர் ஆய்வு

வேட்பு மனு தாக்கல் நடந்த இடத்தில் திருச்சி போலீஸ் கமிஷனர் ஆய்வு
X

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்தார்.

மாநகராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நடந்த இடத்தில் திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் கவுன்சிலர் பதவியிடத்திற்கு போட்டியிடுபவர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள். பிப்ரவரி 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளாகும்.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தந்த கோட்ட அலுவலகங்களில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திற்கு திடீர் என சென்றார்.

அப்போது அங்கு வேட்பு மனு தாக்கலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி அறிவுரை கூறினார். பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகர பகுதியில் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!