திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் நாளிதழ் செய்தியாளர் உயிரிழப்பு

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் நாளிதழ்  செய்தியாளர் உயிரிழப்பு
X

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் நீலக்கண்ணன்.

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் நாளிதழ் செய்தியாளர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர் நீலக்கண்ணன் (வயது32).இவர் திருச்சி தினகரன் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே அளுந்தூர் என்ற இடத்தில் சென்ற போது அவர் மீது பின்னால் வந்த ஒரு சரக்கு வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நீலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து பற்றி மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீலக்கண்ணனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நீலக்கண்ணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு பெற்றோர் மற்றும் இரு சகோதரிகள் உள்ளனர். சாலை விபத்தில் செய்தியாளர் இறந்த சம்பவம் திருச்சி பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்