வாசிப்பு திறனை ஊக்குவிப்பதற்காக திருச்சியில் நடந்த செய்தி தாள் வாசிப்பு முகாம்
திருச்சியில் செய்தி தாள் வாசிப்பு முகாம் நடைபெற்றது.
தகவல் தொழில் நுட்பம் வளர வளர பத்திரிகை வாசிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி 18 முதல்25 வயது வரை உள்ள இளைஞர்கள் பத்திரிகை வாசிப்பதே இல்லை என தெரிய வந்துள்ளது. இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் சிறந்து விளங்கிய தலைவர்கள் அனைவரும் நூல்களை படித்தே தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டதாக அவர்களது வாழ்கை வரலாறு கூறுகிறது.
ஆனால் இன்று இந்தியாவில் மட்டும் இன்றி உலகம் முழுவதுமே இளைஞர்களிடம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே தான் வருகிறது. பத்திரிகை மற்றும் நூல்களை வாசிக்க மறுக்கும் இளைஞர்கள் அதனை தங்களது மொபைல் போன் மூலம் செய்திகளை அறிந்து கொள்கிறார்கள். இப்படியே சென்றால் வாசிப்பு திறன் என்பதே அறவே அழிந்து போய்விடும். வாசிப்பு திறனை இளைஞர்களிடம் ஏற்படுத்துவதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவிரி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக "செய்தித்தாள் வாசிப்பு முகாம்" (NEWSPAPER READING SESSION) இன்று நடைபெற்றது.
இதை திருச்சி ஜெஜெ பொறியியல் கல்லூரி பேராசிரியை சாந்தி தொடங்கி வைத்தார்.
அவர் தனது உரையில் செய்தித்தாள் வாசிப்பின் பிற்கால பயன்களையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் விரிவாக எடுத்துரைத்தார். பத்திரிகை மற்றும் சிறந்த நூல்களை தொடர்ந்து படித்து வரும் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எளிதாக எதிர்கொண்டு நல்ல பணிகளை பெற முடியும் என்றார். மாணவர்கள் தங்கள் நண்பர்களையும் பத்திரிகை வாசிக்க தூண்ட வேண்டுமென எடுத்துக் கூறினார். மேலும் மாணவர்களுக்கு செய்தித்தாள் எப்படி வாசிக்க வேண்டும் என்கின்ற முறையை விவரித்தார். பேராசிரியர் சாந்தி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு உறுதிமொழி வாசிக்க "செய்தித்தாள்களை தினமும் வாசிப்போம்" என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் இன்று நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் நேற்று விண்ணில் பாயப்பட்ட GSLV F14 ஏவுகணை பற்றியும், அதன் செயல்பாடுகள், இஸ்ரோவின் தலைவர் மேலும் பல கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவ மாணவிகள் சிறப்பாக பதில் கூறினர். வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu