திருச்சியில் ரூ.330 கோடியில் புதிய சாலை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சியில் ரூ.330 கோடியில் புதிய சாலை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
X

திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் குப்பைகளை தரம்பிரிக்கும் ரோபோட்டிக் பிரச்சார வாகனத்தை அமைச்சர் நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருச்சி பஞ்சப்பூர் முதல் குடமுருட்டி பாலம் வரை ரூ.330 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் இன்று குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு ரோபோட்டிக் பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு கூறியதாவது:- தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிய நிலையில் சென்னையில் 30-ஆம் தேதிக்குள் வெள்ள தடுப்பு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் கடந்த 50 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்தால் அந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்து ஒரு வாரத்திற்குள் அந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் யாருக்கும் ஏதேனும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அதற்கேற்றார் போல் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு இப்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பிற மாவட்டங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கேயும் அதிக அளவில் தண்ணீர் தேங்காமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதற்கான நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் முழங்கால் அளவிற்கு தண்ணீர் இருந்தால் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் இப்போது கணுக்கால் அளவு தண்ணீர் இருந்தால் கூட தண்ணீர் தேங்கிவிட்டது என்கிறார்கள். அதுவும் அடுத்த அரை மணி நேரத்தில் வடிந்து விடுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் பணி, மின்சார தொழில்நுட்ப பணி, மெட்ரோ குடிநீர் பணியென மூன்று நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்படுகிறது.எனவே மழைக்கால முடியும் வரை எங்கேயும் சாலைகளை தோண்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியை பொறுத்த அளவில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் இணைப்பு செய்யும் பணிகள் இன்னும் 20 சதவீதபணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. கடந்த ஏழு வருடமாக எதுவுமே செய்யவில்லை நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று 2வருடத்தில் சாலை, மின்விளக்கு, குடிநீர் இணைப்புகள் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

திருச்சி குடமுருட்டி பகுதியில் இருந்து பஞ்சப்பூர் வரை கோறையாறு கரையை பலப்படுத்துவதற்கு ரூ. 330 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. நீர்வளத்துறை சார்பில் அனைத்து ஆறுகளும் தூர்வாரப்பட்டுள்ளது அதனால் எங்கேயும் கடைகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா