தி.மு.க. வேட்பாளர் காஜாமலை விஜய்க்கு ஆதரவு திரட்டினார் அமைச்சர் நேரு

தி.மு.க. வேட்பாளர் காஜாமலை விஜய்க்கு ஆதரவு திரட்டினார் அமைச்சர் நேரு
X

காஜாமலை விஜய்க்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரம் செய்தார்.

திருச்சி 60வது வார்டு தி.மு.க. வேட்பாளர் காஜாமலை விஜய்க்கு ஆதரவு திரட்டினார் அமைச்சர் நேரு.

திருச்சி மாநகராட்சி 60வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக பகுதி செயலாளர் காஜாமலை விஜய் போட்டியிடுகிறார். காஜாமலை மெயின்ரோட்டில் அவர் தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளார். இந்த அலுவலகத்தை தி.மு.க. முதன்மை செயலாளரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என். நேரு இன்று திறந்து வைத்தார்.

அலுவலகத்தை திறந்து வைத்து தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் அமைச்சர் நேரும் பேசும்போது எட்டுமாத கால தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சர் நிறைவேற்றி உள்ள மக்கள் நல திட்டங்கள் மற்றும் திருச்சி நகரின் வளர்ச்சிக்காக அடிக்கல் நாட்டியுள்ள திட்டங்களை எடுத்துக்கூறி திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திலும் தி.மு.க. அரசின் நல திட்டங்கள் தங்கு தடையின்றி நிறைவேற காஜாமலை விஜயை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் பெண்கள் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர். மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாள் வைரமணி, மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆகியோர் அமைச்சருடன் வந்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!