திருச்சியில் கண்பார்வையற்றவர்களுக்கு தேசிய அமைப்புசாரா தொழிலாளர் அட்டை
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளா் நல அமைப்புகள் உள்ளடக்கிய செயலாக்கக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, வலைதளத்தில் பதிவு செய்த 20 கண்பார்வையற்ற தொழிலாளர்களுக்கு, தேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டையினை வழங்கினார்.
ஈ-ஷ்ரம் (e-shram) என்னும் வலைதளத்தில் அமைப்புச்சாரா தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர், வீட்டுப் பணியாளர் பால் வியாபாரிகள், விவசாயத் தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வியாபாரிகள், மதிய உணவுத் திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், நூறு நாள் வேலை செய்பவர்கள், செங்கல்சூளை தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் இந்த வலைதளத்தில் தங்களின் ஆதார் எண், கைப்பேசி எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றைக் கொண்டு அருகில் உள்ள பொது சேவை மையத்தில் ஈ-ஷ்ரம் வலைதளத்தில் இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அப்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தொழிலாளர் இணை ஆணையா் த.தர்மசீலன், உதவி ஆணையர்,தங்கராசு, பொது சேவை மையம் மாவட்ட மேலாளர்கள் புவனேஷ்வரன், மணிமாறன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், தொழிலாளா் நல அமைப்பினா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu