திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய மனித உரிமைகள் தின உறுதி ஏற்பு

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய மனித உரிமைகள் தின உறுதி ஏற்பு
X
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய மனித உரிமைகள் தின உறுதி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்ற வாசகங்கள் அடங்கிய இந்த உறுதிமொழியினை கலெக்டர் படிக்க அனைத்து அலுவலர்களும் திரும்ப படித்து உறுதி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், அலுவலக மேலாளர்கள் சிவசுப்ரமணியம்பிள்ளை (பொது), தமிழ்கனி(குற்றவியல்) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி