/* */

தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு திருச்சியில் பாராட்டு

தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு திருச்சியில் பாராட்டு
X

தடகள போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு திருச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த மார்ச் 29,30,31 ஆகிய தேதிகளில் ஆல் இந்தியா ரயில்வே மீட் தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் திருச்சியை சேர்ந்த சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான எம்.மணிகண்ட ஆறுமுகம் 4×100 மீட்டர் தடகள போட்டியில் தங்கம் வென்றார். தேசிய தடகள விளையாட்டு வீரர் வீ.கே. இலக்கியதாசன் 4×100 மீட்டர் போட்டியில் தங்கமும் 100 மீட்டர் போட்டியில் தங்கமும் வென்றார்.


இதனை தொடர்ந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2,முதல் ,6, ம் தேதி வரை நடைபெற்ற பெடரேஷன் ஓபன் மீட் தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வீ.கே. இலக்கியதாசன் 100 மீட்டர் போட்டியில் வெள்ளியும், இதே பிரிவில் தடகள விளையாட்டு வீரர்கள் ஏ. விக்னேஷ் 4 வது இடமும் டி. கதிரவன் 5 வது இடமும் பிடித்தனர்.


இதுபோன்று கடந்த ஏப்ரல் 7,8 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகள விளையாட்டு போட்டியில் தடகள விளையாட்டு வீரர் விசாகன் 100 மீட்டர் பிரிவில் 1 தங்கமும் 200 மீட்டர் பிரிவில் 1 தங்கமும் 400 மீட்டர் பிரிவில் 1 தங்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.

இவர்கள் அனைவரும் தடகள விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று திருச்சிக்கும் தமிழகத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு பொன்மலையில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை, என்ஜினீயர் செந்தில்குமார், ரொட்டேரியன் நாகராஜன், வழக்கறிஞர் கார்த்திகா, சித்திரமூர்த்தி, அருண்குமார் உலக சாதனையாளர் தர்னிகா மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும், அகிலஇந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட பாதுகாப்பு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் மேலும் பல சாதனைகள் புரிந்து தமிழகத்திற்கும் இந்தியவியாவிற்கும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.


இப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற எம்.மணிகண்ட ஆறுமுகம் ,சமீபத்தில் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தடகள விளையாட்டு வீராங்கனை தனலட்சுமி சேகரின் பயிற்சியாளர் என்பதும் இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து தடகள விளையாட்டு வீரர்களும் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் சர்வதேச தடகள விளையாட்டு வீரர் எம். மணிகண்ட ஆறுமுகத்திடம் பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய பெற்றோர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2022 9:05 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...