முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி விழா: திருச்சியில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி விழா: திருச்சியில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் மாலை அணிவிப்பு

சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன், துணை செயலாளர் ஜாக்குலின், எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் ராஜ்குமார், பத்மநாபன், நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, பூபதி, அன்பழகன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், ஜவகர்லால்நேரு, செல்வக்குமார், வழக்கறிஞர்கள் சுரேஷ், சாகர் உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story