கல்லூரி மாணவி கொலையில் நீதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கல்லூரி மாணவி கொலையில் நீதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு
X

கல்லூரி மாணவி கொலையில் நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

கல்லூரி மாணவி கொலையில் நீதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி அருகே பாய்லர் பிளாண்ட் பகுதியை சேர்ந்தவர் வித்யா லட்சுமி. அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இவரை 3 இளைஞர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் போட்டியில் வித்யா லட்சுமியின் வாயில் விஷம் ஊற்றப்பட்டு உள்ளது. இதில் மயங்கி விழுந்த வித்யாலட்சுமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இந்நிலையில் இன்று கல்லூரி மாணவி வித்யா லெட்சுமியின் தாயார் சாந்தி மற்றும் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பு பொதுச்செயலாளர் சங்கர் ஆகியோர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் மாணவி வித்யாலட்சுமியின் வாயில் விஷம் ஊற்றியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!